Politics
கமுதியில் வட்டார கலைத்திருவிழா
கமுதி: கமுதி வட்டார வள மையம் சார்பில் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நடந்தது. தலைமையாசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாண்டீஸ்வரி, ஜெயம் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நுாருல் ஹீதா வரவேற்றார்.
கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 950 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இதில் நாட்டுப்புற நடனம், ஓவியம், வில்லுப்பாட்டு, இசை நாடகம், தனி நபர் நடிப்பு களிமண் பொம்மைகள் செய்தல் உட்பட 32 வகையான போட்டிகள் வயதின் அடிப்படையில் நடந்தது.
இதில் வட்டார அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். உடன் ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் பலரும் செய்தனர். சிறப்பாசிரியர் முத்திருளாண்டி நன்றி கூறினார்.