Religion
வரதராஜ பெருமாள் கோவில் உறியடி உற்சவம்
புதுச்சேரி: செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில், கிருஷ்ணா ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடந்தது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கிருஷ்ணா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, காலை ராதா, கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது.
மாலை கிருஷ்ணன் கோலாட்டம் மற்றும் பகவத் ராமானுஜர் பஜனையுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.
இரவு நடந்த உறியடி உற்சவத்தில் திரளான பொதுமக்கள் உறியடித்தனர். இரவு மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.