Religion
திருத்தணி தளபதி பள்ளியில் கோகுலாஷ்டமி கோலாகலம்

திருத்தணி:திருத்தணி தளபதி மேல்நிலைப்பள்ளியில், கோலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுதும் இன்று, கோலாஷ்டமி என்கிற கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. திருத்தணி ம.பொ.சி., சாலையில் இயங்கி வரும் தளபதி கே.விநாயகம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், கோகுலாஷ்டமி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தளபதி கே.விநாயகம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.பாலாஜி, விழாவை தொடங்கி வைத்தார். கிருஷ்ணர், ராதா, ருக்மணி போன்ற வேடங்கள் அணிந்த பள்ளி சிறுவர் - சிறுமியர், நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
இதில், மாறுவேடமணிந்து சிறப்பாக நடனம் ஆடிய குழந்தைகளுக்கு, பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் பாலாஜி மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.