பாலியல் சீண்டல் தொழிலாளிக்கு சிறை
தேனி, செப்.10– ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்தார். வீட்டில் தனியாக இருந்த
ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்தார்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கூலித் தொழிலாளி ஜெயக்கொடி 48, அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பெற்றோர் புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் ஜெயகொடியை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தேனி போக்சோ நீதிமன்ற நீதிபதி எழில், ஜெயக்கொடிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.