சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
ஈரோடு,:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு, ஈரோடு நீதிமன்றத்தில், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நேதாஜி ரோடு ஆலமரத்தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன், 48, கூலி
தொழிலாளி. இவரது உறவினரின், 13 வயது சிறுமி பள்ளி முடித்து கடந்த,
2024 நவ.,11ல், வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுமிக்கு தாய் இல்லை. பாட்டி
வீட்டில் வளர்ந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, அத்துமீறி
நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
கூச்சலிட்டதால் மகேஸ்வரன் தப்பினார். சிறுமியின் பாட்டி, ஈரோடு
அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். மகேஸ்வரனை போக்சோ
வழக்கில், இரு பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு
ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சொர்ணகுமார் நேற்று வழக்கை விசாரித்து, மகேஸ்வரனுக்கு ஒரு பிரிவில்,
7 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், மற்றொரு பிரிவில், 2
ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,
தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.