Health
வாய்க்காலில் குவிந்துள்ள குப்பையை அகற்ற எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் அருகே, கழிவுநீர் வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பையை அகற்றி, துார் வார வேண்டும் என,
அருகே, கழிவுநீர் வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பையை
அகற்றி, துார் வார வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராயனுார் - ஈசநத்தம் சாலையின் குறுக்கே, அமராவதி ஆற்றின் பாசன கிளை
வாய்க்கால் செல்கிறது. தற்போது, பாசன வாய்க்கால் கழிவுநீர் செல்லும்
வாய்க்காலாக மாறி விட்டது. இந்நிலையில், கழிவு நீர் வாய்க்காலில்
அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை, இறைச்சி கழிவுகள் தேங்கியுள்ளன.
அந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு உற்பத்தி
அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் ராயனுார் பகுதியில், பொதுமக்கள்
துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் - ஈசநத்தம்
சாலையின் குறுக்கே ராயனுாரில் செல்லும், கழிவுநீர் வாய்க்காலை துார் வார,
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கரூர் மாநகராட்சி
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.