Religion
வீடூர் அணையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

விக்கிரவாண்டி : வீடூர் அணையில் வினாயகர் சிலைகளை பக்தர்கள் விஜர்சனம் செய்தனர்.
விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 93 சிலைகளும் பெரியதச்சூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில், 70 சிலைகளும் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
மூன்றாவது நாளான நேற்று விக்கிரவாண்டி பகுதிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வீடூர் அணையில் விஜர்சனம் செய்தனர்.
அது போன்று பெரியதச்சூர் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் 10 சிலைகள் மட்டும் வீடுர் அணையிலும் இதர சிலைகளை உள்ளூர் நீர்நிலை மற்றும் பாண்டி கடற்கரையிலும் தண்ணீரில் கரைத்து
விஜர்சனம் செய்தனர்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணகுமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.