Science and technology
பாலியல் தொல்லை புகார்... மாணவி உயிரிழப்பு: தலைமை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி தெங்கியாநத்தத்தில் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் நிலையில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தில், தலைமை ஆசிரியர் மீதும்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியாநத்தத்தில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 10-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியரையும் கைது செய்யும் வரை உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் தொல்லை புகாரில் ஆசிரியர் ஜெகதீசன் கைது செய்யப்பட்ட நிலையில், அது குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே தலைமை ஆசிரியர் காமராஜிடம் புகாரளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
அதை தொடர்ந்து, காமராஜிடமும் போலீசார் விசாரணையைத் தொடங்கியதால், உடலை பெற்றோர் அடக்கம் செய்தனர்.