Science and technology
மாணவிக்கு பாலியில் தொல்லை அறிவியல் ஆசிரியர் கைது
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 46; கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர். கடந்த 10 நாட்களுக்கு முன் வேறு பள்ளியில் இருந்த இந்த பள்ளிக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 7ம் தேதி அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது தனக்கு பள்ளியில் ஆசிரியர் ஜெகதீசன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதன் காரணமாக பூச்சி மருந்தை குடித்ததாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில், ஜெகதீசன் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர்.