Arts, culture, entertainment and media
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போஸ்டர். - படம்: எக்ஸ்
நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகாவும் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் 40 வயது தொழிலதிபரான சூர்யா, அக்குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை உடல்நலக் குறைபாட்டைக் குணப்படுத்தப் போராடுவதுடன் கூடிய குடும்ப கதையாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது.
இந்தப் படம் உலகளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், செப். 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for actor Suriya's film Viswanath and Sons has been officially announced.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.