Arts, culture, entertainment and media
OTT | ரூ.260 கோடி வசூலித்த சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.. ஓடிடியில் எப்போது ரிலீஸ்..? வெளியான அறிவி...
சூர்யாvவின் ‘விஸ்நாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘விஸ்நாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்தப் படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிதாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படம் ரூ.260 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.
Meet Sanjay Vishwanath - Athlete, billionaire, philanthropist and a loving father 😎 😍 pic.twitter.com/bHAlaMNev0
ஜாலியான எமோஷனல் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் சூர்யாவுக்கு பேக் டூ பேக் ஹிட் கொடுத்துள்ளது. முன்னதாக வெளியான ‘கருப்பு’ ரூ.300 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
