Arts, culture, entertainment and media
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் ஓடிடி அப்டேட்!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்திருக்க இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தனர்.
வாடகைத் தாய் பின்னணியில் 20 வயசு வித்தியாச காதல், அம்மா செண்டிமெண்ட், குடும்ப கலாட்ட என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகியிருந்த படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது வரை உலகளவில் ரூ. 260 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் 11ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது. அதில் தமிழ், தெலுங்கை தவிர்த்து இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் காணக்கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வரவேற்பை பெற்றது போல் ஓடிடி-யிலும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)