Politics
நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரை
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாரத்தில் தொடங்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலர் அமுதா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டாரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் புதிதாக 15க்கும் மேற்பட்ட, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ,படாளத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், உணவு பாதுகாப்பு துறை செயலர் அமுதா, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
இதில், விவசாயிகளிடம் நெல் மூட்டைகளுக்கு பணம் வாங்கப்படுகிறதா என விவசாயிகளிடம் கேட்டறிந்தார் . மேலும், 'முறையாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பதிவு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்' என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன், மாவட்ட வருவாய் துறை அலுவலர் கணேஷ் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர் .