நல்லாசிரியர் விருது பெற்ற 4 ஆசிரியர்கள்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் சார்பில், நடப்பாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தினகரன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன், கொல்லப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சற்குணவதி, காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சென்னியப்பன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், சென்னையில் ஆசிரியர் தினமத்தை முன்னிட்டு நடந்த விழாவில், மாநில நல்லாசிரியர் விருது பெற்றனர்.