Economy, business and finance
நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கை: ரேபிடோ நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ஆணையம்

கார் மற்றும் பைக் டாக்ஸி முன்பதிவு தளங்களின் செயல்பாடு மற்றும் நடவடிக்கை குறித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விரிவான ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகள், தவறான விளம்பரங்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இணையவழி வாகன சேவை நிறுவனமான ரேபிடோவுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அதாவது, வாடகைக்கு காா் மற்றும் இருசக்கர வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களையும், அதற்கான வாடிக்கையாளர்களையும் இணைக்கும் நிறுவனமாக இந்தியாவில் பெரிய அளவில் ரேபிடோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தேவை அதிகம் இருக்கும் சமயத்தில் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்துவது, பயணத்துக்கு முன்பே ஊக்கத்தொகை அளிக்கக் கோருவது போன்ற நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளைப் பின்பற்றுவதாக புகார்கள் வந்தன.
இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரேபிடோ மென்பொருளின் ‘அல்கோரிதம்’ இந்த ஏமாற்று செயல்முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது உறுதியானது. எனவே, இந்த குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து அந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஆணையம் அறிவித்தது.
அதே போல, ஓலா, உபோ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவை நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)