கட்டளை - மாயனுார் சாலை சேதம் அவதிப்படும் வாகன ஓட்டுனர்கள்
கரூர்:மாயனுார் சாலை குண்டும், குழியு-மாக உள்ளதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கதவணை, கட்டளை சாலை வழியாக, திருச்சி மாவட்டம் காட்டு-புத்துார்
உள்ளிட்ட இடங்களுக்கு லாரி, கார், வேன்கள் சென்று வருகின்றன.
காவிரியாற்றில் உள்ள, நீர்த்தேக்க கிணறுகளுக்கும் வாகனங்கள் வந்து
செல்கின்றன. இந்நிலையில், கட்டளை முதல் மாயனுார் வரை
ரங்கநாதபுரம், கீழமாயனுார் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் சாலைகள்
பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது.
வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். இரவு
நேரத்தில் டூவீலர்களில் செல்வோர், அடிக்கடி விபத்தில் சிக்கி
படுகாயமடைகின்றனர். எனவே, கட்டளை முதல் மாயனுார் வரை, குண்டும்,
குழியுமாக உள்ள சாலைகளை, உடனடியாக, சீரமைக்க வேண்டும் என, வாகன
ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.