குண்டும் குழியுமாக மாறிய நாவலுார் –- தாழம்பூர் சாலை
திருப்போரூர், செப். 6– நாவலுார் -– தாழம்பூர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள்

நாவலுார் -– தாழம்பூர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில், சென்னை மாநகராட்சியை ஒட்டிய பகுதிகளாக, நாவலுார், தாழம்பூர் ஊராட்சிகள் அமைந்து உள்ளன.
இப்பகுதிகளில், தற்போது ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பல கல்லுாரிகள் உருவாகி உள்ளன. மக்கள் தொகை, 10 மடங்கு உயர்ந்து, 30 ஆயிரமாக மாறியுள்ளது.
இந்நிலையில், ஓ.எம்.ஆர்., சாலை, நாவலுார் பகுதியிலிருந்து தாழம்பூர் செல்லும் சாலை, 3.5 கி.மீ., உள்ளது. செங்கல்பட்டு நெடுஞ்சாலை கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள இச்சாலையில் நுாற்றுக்கணக்கான தண்ணீர் லாரிகளும், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும், சென்று வருகின்றன. மேலும், அடுத்தடுத்து பெய்த மழையில் சாலை உருக்குலைந்து போனது.
மேலும், ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலங்களில் குளம் போல நீர் தேங்குகிறது.
இரவு நேரத்தில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் விழுந்து படுகாயமடைகின்றனர். வாகனங்களும் பழுதாகிறது. இதனால், கடந்தாண்டு படுமோசமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் நெடுஞ்சாலை துறையினர், சாலையில் ஏற்பட்ட பள்ளங்களில் ‘பேட்ச் ஒர்க்’ மூலம் சீரமைத்தனர். நாவலுார் -– தாழம்பூர் சாலை
சேதமடைந்து சீரழிந்துள்ளது.
எனவே, மேற்கண்ட வழித்தடத்தில் இருவழி சாலையை ஏற்படுத்த, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.