Economy, business and finance
காய்கள் வரத்து குறைவு விலையும் அதிகரிப்பு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. விலையும் அதிகரித்துள்ளது.
கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) - 330, தேங்காய் (ஒன்று) - 30, கத்திரிக்காய் (ஒரு கிலோ) - 53, முருங்கைக்காய் - 42, வெண்டைக்காய் - 55, முள்ளங்கி - 20, பூசணிக்காய் - 10, அரசாணிக்காய் - 10, பாகற்காய் - 55, புடலை - 33,
சுரைக்காய் - 26, பீக்கங்காய் - 50, வெள்ளரிக்காய் - 30, அவரைக்காய் - 60, பீட்ரூட் - 25 மற்றும் பச்சை மிளகாய் - 50 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று வெள்ளரிக்காய் - 5, கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் கிலோவுக்கு, 3 ரூபாய் விலை குறைந்துள்ளது.
இதேபோன்று புடலை - 3, பீர்க்கங்காய் - 10, பச்சை மிளகாய் - 20, தேங்காய் (ஒன்று), முள்ளங்கி மற்றும் பாகற்காய் - 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்பதால், மார்க்கெட்டில் காய்கள் வரத்து வழக்கத்தை காட்டிலும் தலா, 500 கிலோ வரை குறைவாக இருந்தது. அதற்கேற்றார் போல் வியாபாரிகள் வருகையும் குறைவாக இருந்தது. வரும் நாட்களில் காய்கள் வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது,’ என்றனர்.