4 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை
குளித்தலை:குளித்தலை, அண்ணா நகர் சிவாஜி தெருவை சேர்ந்தவர் சித்ரா, 55; இவரது மகள் சிந்துஜா, 27. சென்னையில்
அண்ணா நகர் சிவாஜி தெருவை சேர்ந்தவர் சித்ரா, 55; இவரது மகள் சிந்துஜா,
27. சென்னையில் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.
11:00 மணிக்கு, சிந்துஜா மெடிக்கலுக்கு சென்று வருவதாக தாய்
சித்ராவிடம் கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு
வரவில்லை. தோழிகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும், சிந்துஜா
குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவருக்கு, வரும், 17-ல் திருமணம் நடக்க உள்ள நிலையில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட் டம், திருக்குவளை அடுத்த சித்தைமூர் பகுதியை
சேர்ந்தவர் மதியழகன், 59; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலா,
47. இவர்கள், கடந்த, ஆறு மாதங்களாக குளித்தலை தேங்காய் நார்மில்லில்
வேலை செய்து வந்தனர். கடந்த ஏப்., 26ல் ஊருக்கு சென்ற கலா, வீட்டுக்கு
செல்லவில்லை. உறவினர்களிடம் விசாரித்தும் அவர் குறித்து எந்த
தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மதியழகன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர், தொழிற்பேட்டை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 36;
பசுபதிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளர். இவரது
மகள் சாருபாலா, 18, மாடுவிழுந்தான் பாறையில் உள்ள பாட்டி வீட்டில்
தங்கி, குளித்தலை அரசு கலை கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு
படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வீட்டில்
இருந்தவர் காணவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் சாருபாலா
கிடைக்கவில்லை. இதுகுறித்து புகார்படி, நங்கவரம் போலீசார் மாணவியை
தேடி வருகின்றனர்.
கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 42; டிரைவர் . இவரது மனைவியை
நாகரத்தினம், 31; இவர், கருர் யுனைடேட் இந்தியா இன்சூரன்ஸ்
கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த, 3 மாலை, 6:30 மணிக்கு,
கருப்பூர் நத்தமேட்டில் உள்ள மாமா தேவராஜ் என்பவரின் வீட்டில்
இருந்து, தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின், நீண்ட
நேரமாகியும் நாகரத்தினம் வீட்டுக்கு வரவில்லை. பிரபாகரன் கொடுத்த
புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.