Politics
வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி
எலச்சிபாளையம்:எளச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று, 6 முதல் 8ம்
யூனியன், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று, 6 முதல்
8ம் வகுப்பிற்கு, குறுவளமைய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி நடந்தது.
வரைந்து வண்ணம் தீட்டுதல், பானை ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம்,
செதுக்கு சிற்பம், ரங்கோலி, செவ்வியல் இசை தனிப்பாட்டு, நாட்டுப்புற
பாடல் தனிப்பாட்டு, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற நடனம்,
பரதநாட்டியம் தனி, பரதநாட்டியம், பிறவகை நடனம், பாவனை நடிப்பு, பல
குரல் பேச்சு, குழு நாடகம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. வட்டார
அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும்
போட்டியில் பங்கேற்பார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியர் சுதா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர்
மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர்கள்
முத்துக்குமார், அம்பிகா சிறப்பு பயிற்றுநர் பெரியசாமி ஆகியோர்
கலைத்திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தினர்.