நல்லாசிரியர் விருது பெற்ற 12 ஆசிரியர்கள் கவுரவிப்பு
ஈரோடு:மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 12 ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற விருதை
நல்லாசிரியர் விருது பெற்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 12
ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற விருதை கலெக்டர் கந்தசாமியிடம்
காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தினவிழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மாநில
நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி
கவுரவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் செம்படாம்பாளையம் சாரதா,
காசிபாளையம் ஜோதிமணி, சின்ன சேமூர் சுமதி, அரச்சலுார் ஓடாநிலை
ஷீஜா, கொமாரபாளையம் சந்தியா, பெருந்துறை கந்தன், வலையபாளையம்
தர்மராசு, கேர்மாளம் ரூபி, பவானி வெங்கடாசலம், சென்னம்பட்டி ரமேஷ்,
ரங்கம்பாளையம் நதியா, கவிதா என 12 பேருக்கு விருது, 10,000 ரூபாய்
ரொக்கப்பணம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை கலெக்டர்
கந்தசாமியிடம் காண்பித்த நிலையில், அனைவரும்
கவுரவிக்கப்பட்டனர்.
சிறந்த கற்பித்தலை வழங்கவும், விருது பெற்றவர்கள் மற்றவர்களுக்கு
முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என கலெக்டர் கேட்டு கொண்டார்.
நிகழ்வில் சி.இ.ஓ., மான்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.
