Arts, culture, entertainment and media
விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே முட்ராம்பட்டு கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் மண்வளம் மேலாண்மை பயிற்சி நடந்தது.
வேளாண் அலுவலர் விஜய் தலைமை தாங்கி, மண்வள மேலாண்மையில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேன்மொழி வரவேற்றார்.
வேளாண்மையில் அங்கக உர பயன்பாடு, உயிர் உரங்களின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் சுதா, வேளாண் திட்ட பணிகள், வேளாண் மானியங்கள் பற்றி கூறினார்.
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரமணி செய்தார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் அருள்பாபு நன்றி கூறினார்.