Arts, culture, entertainment and media
வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
மரக்காணம்: விவசாயிகள் பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டிவனம் அருகே உள்ள தென்பசியார்
மரக்காணம்: விவசாயிகள் பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தில் மரக்காணம் வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தில் பயிறு வகை பயிர்களின் தன்னிறைவு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்ம ராஜ் முன்னிலை வகித்தார்.
வேளாண்மை உதவி அலுவலர் ரஞ்சனி வரவேற்றார். முகாமில், பயிர் வகை பயிர்களில் அதிக மகசூல் பெற பருவத்திற்கு ஏற்ற ரகங்களை சாகுபடி, வரிசை முறை, விதைப்பு, விதை நேர்த்தி செய்தல், சொட்டுநீர் பாசன மூலம் பயிர் செய்வது, இலை வழி உரமாக இரண்டு சத டி.ஏ.பி., கரைசல் தெளிப்பு அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் ஊக்கி பல்ஸ் ஓண்டர் தெளிப்பதால் பூ உதிர்வதை தடுத்து காய்கள் நன்றாக பிடித்து மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகளிடம் வேளாண்மை துறை அதிகாரிகள் கூறினர்.
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் திருவரசன், ஆத்மா உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் சந்திரசேகர், அய்யனார் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.