Religion
சரநாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவையொட்டி உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ணர்ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. அதனையொட்டி, உற்சவர் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் வெண்ணைதாழி கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு உறியடி உற்சவம் , உற்சவர் பெருமாள் வீதியுலா நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.