Economy, business and finance
பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது! ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

மேற்காசிய போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இந்த வாரத்தின் முதல் 3 நாள்கள் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்த நிலையில் நேற்று (செப். 10) சற்று உயர்வுடன் முடிந்தன.
தொடர்ந்து இன்று (செப். 11) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,309.16 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 480.12 புள்ளிகள் சரிந்து 74,427.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலையில் 700 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 168.95 புள்ளிகள் குறைந்து 23,308.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக இருந்தன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.42 சதவீதம், 1.40 சதவீதம் சரிந்து வர்த்தகமாயின.
துறைவாரியாக, நிஃப்டி ஐடி தவிர மற்ற அனைத்துத் துறை பங்குகளும் சரிந்து வர்த்தகமாகின்றன. ரியல் எஸ்டேட் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்து 108.62 டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
stock market: Sensex dives 700 pts intraday; Nifty below 23,250
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
