ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்-டுகோள்
பள்ளிப்பாளையம்; பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் நீராதாரத்தை பாழாக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில், கடந்த சில நாட்களாக ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஓரிரு மாதங்களில் ஆறு முழுவதும் இந்த ஆகாயத்தாமரை படர்ந்து விடும். அந்தளவுக்கு வேகமாக வளர்ந்து வருகி-றது. அதனால், ஆற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் வழியின்றி, பொதுமக்கள் அவதிப்-பட்டு வருகின்றனர். அதேபோல், மீனவர்களும் பரிசலில் சென்று மீன் பிடிக்க இடையூறாக உள்-ளது.அதிகளவு ஆகாயத்தாமரை படர்ந்த பின் அகற்-றுவது கடினம் என்பதால், முன்னெச்சரிக்கை நட-வடிக்கையாக தற்போதே ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, குமாரபா-ளையம் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.