காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் அருகே, காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள், குப்பைகளை அகற்ற

அருகே, காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை
செடிகள், குப்பைகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள்
எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக, தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளது. தற்போது, கரூர் மாவட்டத்தில், கரூர் பஞ்.,
யூனியன் பகுதிகளில் காவிரி ஆற்றுப்பகுதியில் நெல் நாற்று பயிரிட
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, காவிரி ஆற்றின் கிளை
வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர்
அருகே புகழூர் காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள்,
குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளது. மேலும், ஆகாய தாமரை செடிகளும்
வாய்க்காலில் முளைத்து படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள்,
குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, பொதுப்பணித்துறை
மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.