Arts, culture, entertainment and media
இருவர் அடித்து கொலை; உறவினர்கள் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர்கள் கோபி, 35, ரியாசுதீன், 55; கூலித் தொழிலாளர்கள்.
நேற்று காலை, இருவரும் ஊர் அருகில் உள்ள சீமைக்கருவேலம் காட்டுப்பகுதியில், முகம் முழுதும் ரத்தம் படிந்தநிலையில், இறந்து கிடந்தனர். அருகில், காலி மது பாட்டில்களும் கிடந்தன.
இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன், மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், போலீசார் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
எஸ்.பி., சந்தீஷ் கூறுகையில், ''கோபி, ரியாசுதீன், உடலில் வெட்டுக்காயங்கள் இல்லை. பிரேத பரிசோதனைக்கு பின் தான் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும்,'' என்றார்.
