Arts, culture, entertainment and media
ஏர்வாடி அருகே மர்மமான முறையில் 2 பேர் உயிரிழப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே, சின்னமாயாகுளம் கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கருவேலங் காட்டுப் பகுதியில், கண் மற்றும் மூக்கில் ரத்தம் வந்து மர்மமான முறையில் 2 பேர் இறந்துகிடந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.
கோபி, ரியாசுதீன் ஆகிய இருவரது உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.