Politics
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! - யார் யார் தெரியுமா?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு. | NTK releases its candidate list for the Madurantakam and Dharapuram assembly by-elections, as well as Puducherry's Thattanchavadi constituency.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்ததால் இந்த இரண்டு இடங்களும் காலியாகின.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் பி. சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், கே. பானுமதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மதுராந்தகம் தொகுதியில், கோ. ஜானகிராமன் என்பவரும், தாராபுரம் தொகுதியில், மு. கார்த்திகா என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ச. கார்த்திக் குமாரி வேட்பாளராகக் களமிறக்கப்படுவதாக நாதக கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது.
