Politics
இடைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னே வேட்பாளரை அறிவித்த முதலமைச்சர்! யார் போட்டி?

ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கும், மேற்குவங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜினாநகர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அசாமின் நாகான் மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் ஆறு தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.
இந்த ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், செப்டம்பர் 19ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் எனவும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று இடைத் தேர்தல் அறிவித்துள்ள நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பாகவே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
