Arts, culture, entertainment and media
‘ஓம்’ படத்தில் நடிகர் மம்மூட்டியின் கதாபாத்திர டீசர் 5 கோடி வியூஸ் கடந்து சாதனை!

‘ஓம்’ திரைப்படத்தின் நடிகர் மம்முட்டியின் கதாபாத்திர டீசர் 5 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்துக்கு ‘ஓம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மம்மூட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய கதாபாத்திர டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
The highest-viewed teaser for a Mollywood actor!
A @Rajkumar_KP Film.
A @SaiAbhyankkar Musical. #OM @dhanushkraja @mammukka @RTakeStudios… pic.twitter.com/WKn5JdYArs
— Wunderbar Films (@wunderbarfilms) September 11, 2026
நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் மம்மூட்டி நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான அனைத்து டீசர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 5 கோடி பார்வைகளை இது பெற்றுள்ளது. அதிக பார்வைகளைப் பெற்ற மலையாள நடிகர் ஒருவரின் டீசர் என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது.
