Arts, culture, entertainment and media
மம்மூட்டி எண்ட்ரி... - பிறந்தநாளுக்கு வீடியோ வெளியிடும் தனுஷ் படக்குழு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஓம்’. தனுஷின் 55வது படமாக உருவாகி வரும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா மற்றும் மம்மூட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷாவும் இணைந்து நடிக்கின்றார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இப்படம் அக்டோபர் 16ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தள்ளிப் போகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லு போஸ்டர் மற்றும் அதன் கிளிம்ஸ் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த கிளிம்ஸில் திருவண்ணாமலைக்கு அருகே மரம் வெட்டும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் என்கவுண்டர் செய்வது போலவும் அவர்களை தனுஷ் வந்து காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படம் நிறைய உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு கதை என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியிருந்தார்.
இதையடுத்து படத்தின் முதல் பாடலான ‘அலாகா லோவா( Alaakaa Loova)’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் மம்மூட்டியின் கதாபாத்திர அறிமுக வீடியோ குறித்து அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மம்மூட்டியின் பிறந்தநாளான செப்.7ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ‘சியா எண்ட்ரி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ் அறிமுகமான கிளிம்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
For @mammukka Naanum marana waiting, like all his fans worldwide #OMChapter1#UdhiramTheBloodWood#Mammootty#Siya@dhanushkraja@RTakeStudios@wunderbarfilms@Sai_Pallavi92@sreeleela14@SaiAbhyankkar@Shra2309@azy905@theSreyas… pic.twitter.com/iPJ71zseXP
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)