Religion
கிருஷ்ண ஜெயந்தி விழா கூடலுாரில் கோலாகலம்
கூடலூர்: கூடலூர், மசினகுடி, தேவர்சோலையில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
கூடலூரில், வி.எச்.பி., சார்பில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. மைசூரு சாலை முனீஸ்வரர் கோவிலில், துவங்கிய
ஊர்வலத்தில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
ஊர்வலம் ஊட்டி -– மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்று விநாயகர் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மசினகுடியில் ஊர் மக்கள் சார்பில், 5ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. வாழைத்தோட்டம் ஜி.ஆர்.ஜி., பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணர், ராதை காட்சியளித்தார். ஊர்வலத்தில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர். தேவர்சோலையில் வி.எச்.பி., சார்பில் கிருஷ்ணர் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. ஸ்ரீசங்கரன் கோவிலில் துவங்கி, தேவர்சோலை நகர் வழியாக சென்று, 8வது முருகன் கோவிலில் நிறைவடைந்தது.