Lifestyle and human interest
கூடலூரில் ஆட்கொல்லி புலியை பிடிபடுவதில் தாமதம்... முடங்கிய லாரஸ்டன் கிராம மக்கள் வாழ்வாதாரம்..!

கூடலூர் அருகே இருவரைத் தாக்கிய புலியைப் பிடிக்க தாமதமாகும் நிலையில், லாரஸ்டன் கிராம மக்கள் 11 நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாமல் வருவாய் இழந்து சிரமப்படுகின்றனர்.
கூடலூர் அருகே இருவரைத் தாக்கிய புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், லாரஸ்டன் கிராம மக்கள் 11 நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாமல் வருவாய் இழந்து சிரமப்படுகின்றனர்.
புலியைப் பிடிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டும், அதன் இருப்பிடத்தைக் கண்டறிவதில் வனத்துறையினர் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
கூடலூர் லாரஸ்டன் பகுதியில் இருவரைக் கொன்ற புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 13 இடங்களில் கூண்டுகள் அமைத்தும், 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், மூன்று ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் புலி தேடப்படுகிறது. மேலும், இரண்டு கும்கி யானைகளும் களமிறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: Krishna Janmashtami: குழந்தை கிருஷ்ணன் தெரிஞ்சிருக்கும்... மீசை வைச்ச கிருஷ்ணன் தெரியுமா..?
வனத்துறையின் ஆல்பா மற்றும் டெல்டா குழுவினர் துப்பாக்கிகளுடன் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், புலியின் இருப்பிடத்தைக் கண்டறிவதில் வனத்துறையினர் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
புலி நடமாட்டம் காரணமாக, லாரஸ்டன் பகுதி கிராம மக்கள் தேயிலைத் தோட்டங்களுக்கும், வெளிப்பகுதிகளுக்கும் வேலைக்குச் செல்ல முடியாமல் 11 நாட்களாக வருவாய் இன்றி சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரெப்கோ வங்கி மற்றும் வியாபாரி சங்கங்கள் சார்பில் கிராம மக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டன. புலி பிடிபட்டு இயல்பு வாழ்க்கை திரும்பும் என கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
