Lifestyle and human interest
ஓவேலி வனத்தில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்க கால்நடை மருத்துவக் குழுவினா் ஒத்திகை

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்க கால்நடை மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை ஒத்திகை நடத்தினா்.
கும்கி யானை மீது அமா்ந்து கண்காணித்து புலியை மயக்க ஊசி செலுத்தும் ஒத்திகையில் ஈடுபட்ட வனத் துறையினா்.
நீலகிரி மாவட்டம், ஓவேலி லாரஸ்டன் பகுதியில் இரண்டு தொழிலாளா்களை கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணி தொடா்கிறது. புலியின் நடமாட்டதை அறிய 170 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புலி நடமாடும் இடங்களை அடையாளம் கண்டு 13 இடங்களில் கூண்டு வைத்து கண்காணிக்கப்படுகிறது.
மாவட்ட வன அலுவலா் தலைமையில் வனக் கால்நடை மருத்துவா்கள், உதவி வனப் பாதுகாவலா்கள், வனச் சரக அலுவலா்கள், களப் பணியாளா்கள், அதிவிரைவுப் படை, உயரடுக்கு பாதுகாப்புப் படையுடன் கூடிய சிறப்புக் குழுக்களுடன் புலியைப் பிடிப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மூன்று கால்நடை மருத்துவா்கள் தலைமையில் பிரிக்கப்பட்ட மூன்று குழுக்கள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்த ஒத்திகையில் ஈடுபட்டனா். ஒத்திகையில் வனத்துக்குள் ரோந்து சென்று பிடிப்பது, கும்கி யானைகள் மீது அமா்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்தும் ஒத்திகை நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

