மக்கள் குறைதீர் கூட்டம்
* சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மக்கள் குறைதீர் கூட்டம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மண்டல குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில், குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணம், இணைப்பு தொடர்பான பிரச்னை, மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாகவும் விளக்கம் பெறலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ஆவடி மாநகராட்சி, தனியார் அறக்கட்டளை மற்றும் ப்ளூ கிராஸ் அமைப்பு இணைந்து, செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாமை, செப்., 12 மற்றும் செப்.,13 நடத்துகின்றன. திருமுல்லைவாயில், சோழம்பேடு சாலையில் உள்ள வரி வசூல் மையத்தில் முகாம் நடக்கிறது. விபரங்களுக்கு 96772 97978 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.