வரும் 30க்குள் வரி செலுத்த குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னை: நடப்பு அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணத்தை, வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடிநீர் வாரியத்தில், 2026 - 27ம் ஆண்டின், முதல் அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம், ஏப்., முதல் செப்., மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
வரி, கட்டணத்தை அனைத்து பகுதி மற்றும் தலைமை அலுவலக மையங்களில் காசோலை, வரைவோலையாகவும், அந்த அலுவலகங்களில் உள்ள க்யூ.ஆர்., குறியீடு வாயிலாகவும் செலுத்தலாம்.
மேலும், https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், இ - சேவை மையங்கள் வாயிலாகவும் செலுத்தலாம்.
நுகர்வோர், இம்மாதம் 30ம் தேதிக்குள், நடப்பு அரையாண்டு மற்றும் நிலுவை தொகையை செலுத்தி, அபராதத்தை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.