Religion
பண்டரிநாதன் கோவிலில் உறியடி திருவிழா கோலாகலம்

கரூர்:கரூர் பண்டரிநாதன் கோவிலில் , 104வது ஆண்டு உறியடி திருவிழா நடந்தது.
முழுவதும் நேற்று முன்தினம், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
அதையொட்டி, கரூர் பண்டரிநாதன் கோவிலில், நேற்று இரவு பாண்டு
ரங்கராஜ விட்டல் நாதரை எழுந்தருள செய்து, உறியடி திருவிழா மற்றும்
வழுக்கு மரம் ஏறும் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணர்-ராதை வேடமிட்டு கோவிலுக்கு வந்த குழந்தைகளுக்கு பரிசு
பொருட்கள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து, பாண்டு ரங்கராஜ விட்டல்
நாதரின் உற்சவர் திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம்
வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, ஸ்ரீ பாண்டுரங்கராஜ விட்டல் நாதர் பஜனை மட டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.