Religion
சதுர்த்தி விழா உற்சாகம்
தாராபுரம்:விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தாராபுரத்தில், 80க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள்
சதுர்த்தி விழாவையொட்டி தாராபுரத்தில், 80க்கும் மேற்பட்ட இடங்களில்
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சதுர்த்தி விழா
தாராபுரத்தில் ஆண்டு தோறும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வீதி உள்பட நகரின் பல்வேறு இடங்கள் மற்றும் வடுகபாளையம்,
ஆலாம்பாளையம், கொண்டரசம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில்,
75க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடந்தது.இந்த சிலைகள் அனைத்தும் நாளை
ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அமராவதி ஆற்றில் கரைக்கப்பட
உள்ளது. இதேபோல் குண்டடத்தில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட,
15க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும், அமராவதி ஆற்றில் இன்று
விசர்ஜனம் செய்யப்படுகிறது.