Politics
எம்.எல்.ஏ.,வுடன் விவசாயிகள் மறியல் முயற்சி; நெல் கொள்முதல் துவக்கம்
அந்தியூர்,:அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசன பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் அறுவடை தொடங்கியுள்ள

தடப்பள்ளி பாசன பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் அறுவடை
தொடங்கியுள்ள நிலையில், செப்., 1ம் தேதி முதல் அரசு கொள்முதல் நிலையம்
திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படும் என விவசாயிகள்
எதிர்பார்த்தனர். ஆனால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால்,
விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர் சட்டசபையில் வலியுறுத்திய நிலையில்,
உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனிடம் கோரிக்கை விடுத்தார். செப்.,4ல்
கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனாலும்
நேற்று முன்தினமும் நெல் கொள்முதல் செய்யவில்லை. இந்நிலையில்
எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள்,
கள்ளிப்பட்டியில் கணக்கம்பாளைம் பிரிவில் சாலை மறியல் செய்ய முடிவு
செய்து, நேற்று காலை திரண்டனர். தகலறிந்த சத்தி டி.எஸ்.பி., முத்தரசு,
கோபி தாசில்தார் குமரேசன், மண்டல மேலாளர் மோகன் உள்ளிட்ட அலுவலர்கள்,
எம்.எல்.ஏ., மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.விலை
நிர்ணயம் செய்து ஆர்டர் வரும் வரை காத்திருக்காமல், நெல்லை கொள்முதல்
செய்து எடை போட வேண்டும். விலை நிர்ணயம் செய்ததும் அதற்கான ரசீதை
தரலாம் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நெல்
மூட்டைகளை கொள்முதல் செய்ய துவங்கினர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.