Politics
தனியார் பல்கலை. நிலம், நிதி குறைப்பு சட்ட திருத்த மசோதா.. பேரவையில் நிறைவேற்றம்!

தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க நிலம், நிதி குறைக்கும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்.
தனியார் பல்கலைகழங்கள் அமைப்பதற்காக நிலம் மற்றும் அறக்கட்டளை நிதியை குறைப்பதற்கான சட்டத் திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தாக்கல் செய்த நிலையில் ஆய்வு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பாமக உறுப்பினர் கணேஷ்குமார், பல்கைலைக்கழகத்தில் நிலபரப்பு மற்றும் வைப்பு தொகை குறைப்படுகிறது. இதன் காரணமாக பல்கலைக்கழகம் தனியார்மயம் ஆக்கப்படுவதை அதிகமாக இருக்கும். அதோடு இந்த சட்டம் எழை எளிய மக்களுக்கு பயன் தராது. எனவே சட்டதிருத்தத்தை கை விட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை தொட்ரந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து , இந்த சட்டம் சமூக நீதிக்கு எதிராக உள்ளது என்றார். இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், உலக தரத்திலான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் புதிய பல்கலைக்கழங்கள் தொடங்குவதற்கு தான் இந்த தீர்மானம். ஏற்கனவே உள்ள கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றம் இந்த சட்டம் சட்டம் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து பேரவையில் பெருபான்மை ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஒப்புதலும் சட்டதிருத்த மசோத முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு நூறு ஏக்கருக்கு குறைாத நிலமும், நிர்வாக செலவுகளை சமாளிப்பதற்கு பல்கலைக்கழகம் குறைந்தது 50 கோடி ரூபாய் நிதியில் நிலையான அறக்கட்டளை நிதியைத்தை நிறுவவேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இதையும் படிங்க: நன்செய் நில மேம்பாட்டுக்கு கலெக்டர் ஒப்புதலை நீக்கும் சட்ட திருத்த மசோதா.. எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி பேரவையில் நிறைவேற்றம்!
இந்த நிலையில் ஒன்றிய அரசு ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் செய்வதற்கு பணிக்குழுவை அமைத்தது. இப்பணிக்குழு, தனியார் பல்கலைக்கழகங்கம் ஒன்றை அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலத் தேவையை நீக்குவது குறித்தும் உயர்கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான குறைந்தபட்ச அறக்கட்டளை நிதித்தேவையை திருத்தம் செய்வதற்கான பரிந்துரையை வழங்கியது.
இந்த பரிந்துரைகளை கவன ஆய்வு செய்து 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தாக்கல் செய்தார். இந்த சட்டமுன்வடிவில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் நிலப்பற்றாக்குறை கருத்தில் கொண்டு தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு குறைந்த பட்சம் 12 ஏக்கர் நிலமும், பிற மாநகராட்சிகள் நகராட்சிகளில் 18 ஏக்கரும் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் தவி மற்ற பகுதிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 18 ஏக்கம் நிலம் போதுமானது என அரசு முடிவு செய்துள்ளது. இதே போல நிலையான அறக்கட்டளை நிதியை 50 கோடியில் இருந்து 25 கோடியாக குறைக்கவும் அரசு முடிவு செய்து இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
