ஏரியில் சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றும் பணி துவக்கம்
நல்லம்பள்ளி:சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,

உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், நல்லம்பள்ளி ஊராட்சி
ஒன்றியம், பாளையம்புதுார் பஞ்.,ல், 4 ஏக்கர் பரப்பளவிலான புது
ஏரியிலுள்ள சீமை கருவேல மரங்களை, பொக்லைன் மூலம், வேருடன் அகற்றும்
பணியை நல்லம்பள்ளி பி.டி.ஓ., குமரேசன் தொடங்கி வைத்தார்.
பொறியாளர் சரத்குமார் மற்றும் துணை பி.டி.ஓ., அறிவழகன், பஞ்., செயலர்
கஜேந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.*
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்ட
சந்தையூர், சந்தை ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் முழுமையாக
அகற்றும் பணிகள் பி.டி.ஓ., அறிவழகன் தலைமையில் நடந்தது.