சீமை கருவேல மரங்களை அகற்ற கமிஷனர் உத்தரவு
கோவை: மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை ஐகோர்ட் கடந்த மாதம் 21ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அதன் நில உரிமையாளர்கள் 10 நாட்களுக்குள் வேருடன் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் மாநகராட்சி மூலம் அகற்றப்படும். அதற்கான செலவினம் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்படும்,’’ என்று கூறியுள்ளார்.