Politics
சிவகங்கையில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சிவகங்கை,செப்.13- த.வெ.க., அரசை கண்டித்தும் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளை கண்டித்தும்
த.வெ.க., அரசை கண்டித்தும் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளை கண்டித்தும் சிவகங்கை அரண்மனை பகுதியில் தி.மு.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசி, மதியரசன், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகர் செயலாளர் துரைஆனந்த் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியசெயலாளர்கள் முத்துராமலிங்கம், மந்தகாளை, ஜெயராமன், யோக கிருஷ்ணகுமார், இளைஞர் அணி செந்தில், சேதுபதிராஜா, மதி, கார்த்திக், கவுன்சிலர்கள் அயூப்கான், ஜெயகாந்தன், காந்தி, ராமநாதன், வீரக்காளை, ஜெயக்குமார் கலந்துகொண்டனர்.