Politics
முதல்வர் விஜய் பேச்சை கண்டித்து காஞ்சிபுரத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், செப். 13--– சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சை கண்டித்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே,
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சை கண்டித்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரத்தில், கலெக்டர் அலுவலகம் அருகே, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் சுந்தர் தலைமை வகித்தார். சட்டசபையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உள்ளிட்டோர் குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கு தி.மு.க., தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
குறிப்பாக, ஸ்டாலின் இளம் வயதில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை கொச்சைப்படுத்தும் வகையில் விஜய் பேசியதாக தி.மு.க., குற்றம் சாட்டியது.
இதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, செயற்குழு உறுப்பினர் சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.