Religion
ஜெயந்தி ஜென்மாஷ்டமி தேரோட்டம் கோலாகலம்
தாரமங்கலம்,:தாரமங்கலம், மல்லிக்குட்டை சென்றாய பெருமாள் கோவிலில் ஸ்ரீஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா,
மல்லிக்குட்டை சென்றாய பெருமாள் கோவிலில் ஸ்ரீஜெயந்தி ஜென்மாஷ்டமி
விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமிக்கு
சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
மாலை, 4:00 மணிக்கு மேல் சிறு தேரில் விநாயகர், பெரிய தேரில் ஸ்ரீதேவி,
பூதேவி, சென்றாய பெருமாளை எழுந்தருளச் செய்தனர். 5:00 மணிக்கு மேல்,
பக்தர்களின், 'கோவிந்தா' கோஷம் முழுங்க, இரு தேர் மற்றும் மாரியம்மன்
மகமேருவை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் இழுத்து
செல்லப்பட்டு, மீண்டும் கோவிலில் நிறைவு செய்தனர். தொடர்ந்து
மாரியம்மன் கோவில் அருகே உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
நடந்தது.
அ.தி.மு.க.,வின், ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி,
கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் வழிபட்டனர். இன்று சுவாமி கருட
வாகனத்தில் பவனி, மஞ்சள் நீராட்டு விழாவுடன், கோகுலாஷ்டமி விழா
நிறைவடைகிறது.