ரூ. 20 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
அன்னுார்: அன்னுாரில் நடந்த ஏலத்தில், 20 லட்சம் ரூபாய்க்கு விளைபொருட்கள் விற்பனையானது.
அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர ஏலத்தில், 15 ஆயிரத்து 600 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கிலோ குறைந்தது 44 ரூபாய் 30 பைசா முதல், அதிகபட்சம் 55 ரூபாய் ஒரு பைசா வரை விற்பனையானது.
தேங்காய் கொப்பரை 180 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஒரு கிலோ குறைந்தது 100 ரூபாய் பத்து பைசா முதல், அதிகபட்சமாக 161 ரூபாய்க்கு விற்பனையானது.
தேங்காய் தொட்டி 88 குவின்டால் கொண்டு வரப்பட்டிருந்தது. ஒரு கிலோ 37 ரூபாய் 16 பைசா என விற்பனையானது. மொத்தம் 20 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனையானது. 209 விவசாயிகள் பங்கேற்றனர்.
இத்தகவலை கோயம்புத்துார் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.