9 சவரன் நகை திருட்டு கல்லுாரி மாணவி கைது
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள, ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த மெக்கானிக் தமிழ்ச்செல்வன், 59. சங்கம்பாளையத்தை சேர்ந்த அவரது நண்பர் ராஜேஷ் என்பவரின் மகள் ஜாய் பிரியன்சி,19, கடந்த, 16ம் தேதி, தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு வந்துள்ளார்.
அதன்பின், அவரது வீட்டில் இருந்த, 9 சவரன் நகை காணாமல் போனது. பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில், நண்பரின் மகள் நகையை திருடியது உறுதியானது.
நகை திருட்டில் ஈடுபட்ட பெண், பொள்ளாச்சி அரசு கல்லூரியில் படிக்கிறார். திருட்டு நகையை பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள நகைக்கடையில் விற்று, 2.5 லட்சம் ரூபாய் பணம் பெற்றதை ஒப்புகொண்டார்.
அந்த பணத்தில், தனது காதலர் மாக்கினாம்பட்டியை சேர்ந்த ஜனகன் சிவா என்பவருக்கு புதிதாக பைக் வாங்கி கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார். அந்த பெண்ணை கைது செய்து விசாரிக்கிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.