நகையை திருடி காதலனுக்கு கேடிஎம் பைக் கிப்ட் கொடுத்த கல்லூரி மாணவி.

கோவை மாவட்டம் ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள தனது தந்தையின் நண்பரின் வீட்டில் இருந்து 9 சவரன் நகையைத் திருடியதாக 19 வயது கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
திருடிய நகையை பொள்ளாச்சியில் உள்ள நகைக் கடையில் இரண்டரை லட்ச ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தில் தனது காதலன் ஜனகன் சிவாவுக்கு புதிய இருசக்கர வாகனத்தை கல்லூரி மாணவி வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
கல்லூரி மாணவியை சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள காதலனைத் தேடி வருகின்றனர்.
திருடிய பணத்தில் பைக் வாங்கிக் கொடுத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.